திடீரென போராட்டத்தில் குதித்த எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள்.!

1555பார்த்தது
அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.!

மதுரையில் AIMS மருத்துவக் கல்லூரி இன்னமும் கட்டி முடிக்கப்படாத நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டு ஆண்டுக்கு 50 மாணவர்கள் வீதம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று மேற்படி மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக 150 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக பயின்று வருகின்றனர்.  

இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் அரசியல் காரணமாக தங்களுக்கு உரிய இடம் வழங்கவில்லை எனவும், தற்போது பயின்று வரும் மருத்துவ கல்லூரியில் விளையாட்டு  மைதானம், குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பு வசதியும் கிடையாது என கூறி தங்களுக்கு புரிய மாட்டிய இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி 150 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி