ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ள நிலையில் அந்த வீடுகளுக்கு 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை மீட்டுக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டபொழுது தண்ணீர் இரண்டு வேலையும் வந்ததாகவும் அதன் பிறகு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கியதால் வாரத்தில் ஒரு நாள் வந்ததாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த குடிநீர் மேல்நிலை நீட்டிக்க தொட்டியில் இருந்து மேலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு தற்போது இணைப்பு கொடுக்க முன்வந்துள்ள நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு வாரத்துக்கு ஒருமுறை தண்ணீர் வருவதாகவும் தற்போது குடிநீர் குழாய் இணைப்பு புதிதாக கொடுத்தால் மேலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என கவலை தெரிவித்தனர்.
சமத்துவபுரத்தில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குடிநீர் குழாய்களில் குடங்களை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத அளவிற்கு தரையோடு தரையாகவும், மழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்கியும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இதை சரி செய்யவில்லை என்றால் விரைவில் போராட்டங்களை கையில் எடுக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்