பாதயாத்திரை செல்லும் சபரிமலை பக்தர்கள்.!

64பார்த்தது
ஜோதி தரிசனம் சாயல்குடி - சபரிமலை 15 நாள் 18 ஆம் ஆண்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை பயணம் தொடக்கம்.

நெடுந்தூர நடை பயண யாத்திரை பக்தர்கள் ஐயப்பனை எளிதில் தரிசிக்க அனுமதிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் ஜோதி தரிசனம் காண. 18ம் ஆண்டு 15 நாள் பயணத்தை துளசி மாலை அணிந்த 15 ஐயப்ப பக்தர்கள் புனித யாத்திரை நடைபயணத்தை துவங்கினர்.

சாயல்குடியில் நடை பயணத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள் விளாத்திகுளம் எட்டயபுரம் கோவில்பட்டி தென்காசி செங்கோட்டை புளியரை அச்சன்கோவில் எரிமேலி பேட்டை துள்ளல் பெருவழிப் பாதை வழியாக பம்பை புனித நதியில் நீராடி சன்னிதானம் சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து மகர விளக்கு ஜோதியை காண்பதற்காக சென்றனர்.


நெடுந்தூர நடை பயண யாத்திரை செல்லும் பக்தர்களை ஐயப்பனை எளிதில் தரிசிக்க கேரளா போலீசார் தேவஸ்தானம் போர்டு வனத்துறை சிறப்பு பதிவு பெற்று அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி