செல்லியம்மன் திருவிழா: பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்.!

72பார்த்தது
செல்லியம்மன் திருவிழா: பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்.!
முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி, பக்தர்கள் காவடி எடுத்து, பூக்குழி இறறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இந்தத் திருவிழா கடந்த 12}ஆம் தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இவர்கள் முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து காந்தி சிலை பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, வழிவிடு முருகன் கோயில் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு சிறறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றறது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 20 அடி வேல் குத்தியும், பறறவைக் காவடி, மயில் காவடி எடுத்தும், பூக்குழி இறறங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றறது.

மாலையில் அம்மனுக்கு சிறறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றறது. முதுகுளத்தூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி