மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

54பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி காட்டாற்று பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் 5 கறம்பக்குடி சப் இன்ஸ்பெக்டர் இங்கர்சால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி சேவுகன் தெரு அருகே சென்ற 2 மாட்டு வண்டிகளை சோதனை செய்ததில், அதில் அப்பகுதியில் உள்ள காட்டாற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி