பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சபாநாயகரின் மகள்

559பார்த்தது
பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சபாநாயகரின் மகள்
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் நமச்சிவாயம் அவர்களுக்கு ஆதரவாக மணவெளி சட்டமன்ற தொகுதியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் அவர்களின் இளைய மகள் டாக்டர் ஜனனி செல்வம், பாஜக மணவெளி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், மாவட்ட தலைவர் சுகுமார், என் ஆர் காங்கிரஸ் கட்சி தொகுதி தலைவர் மனோகரன், பாஜக தொகுதி தலைவர் ரஞ்சித்குமார், தொகுதி பொறுப்பாளர் தினகரன், பாமக தொகுதி தலைவர் முனியன், பாண்டியராஜன், இரா. மணிபாலன், மாநில உழவர் பேரியக்க செயலாளர் சேதுபதி, ஆகியோர் தலைமையில் சின்ன வீராம்பட்டினம் மற்றும் ஓடைவெளி கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் சின்னவீராம்பட்டினம், ஓடைவெளி ஆகிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது பாஜக, என் ஆர் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.