நமது சின்னம் குக்கர் - டிடிவி.தினகரன் சூளுரை

64பார்த்தது
நமது சின்னம் குக்கர் - டிடிவி.தினகரன் சூளுரை
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், குக்கர் சின்னத்தின் மூலம்தான் நமது இயக்கத்தை மீட்டெடுக்க முடியும்; துரோகத்தை வீழ்த்த வந்த சின்னம் தான் குக்கர். நாடாளுமன்றத் தேர்தலில் தீய மற்றும் துரோக சக்திகளை வீழ்த்திக்காட்ட வேண்டும் என்று சூளுரைத்தார். டிடிவி தினகரன் முதன்முதலில் ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி