மகா சக்தி கணபதி கோவிலில் சிறப்பு பூஜை

76பார்த்தது
மகா சக்தி கணபதி கோவிலில் சிறப்பு பூஜை
கோத்தகிரி டானிங்டனில் மகா சக்தி கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நாளான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விநாயகருக்கு அருகம்புல்லை சாற்றி, 108 மந்திரங்கள் கூறி பூஜைகள் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல டானிங்டன் கருமாரியம்மன் கோவிலிலும், கடைவீதி விநாயகர் கோவிலிலும் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி