நாமக்கல் மாவட்டத்தில் உலக சுற்று சூழல் தினவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ராசிபுரத்தை அடுத்த ஒடுவங்குறிச்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் கல்வி நிறுவன சேர்மன் மஹிந்தர்மணி தலைமை தாங்கினார். மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் சீராப்பள்ளி பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் மற்றும் சீராப்பள்ளி பேரூராட்சி துணைத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.