மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் பிரதான சாலைகளான பிடாரி வடக்கு வீதி, தேர் வடக்கு வீதி, காமராஜர் வீதி, புதிய பேருந்து நிலையம், தென்பாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவு மாடுகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாடுகள் திடீரென சாலையின் கோரி ஓடுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
உடனடியாக கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.