மயிலாடுதுறை அடுத்த சித்தர் காடு நவீன் அரசி ஆலை கிடங்கில் இருந்து 2000 டன் எடை கொண்ட ஐம்பதாயிரம் நெல் மூட்டைகள் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்டு, திருப்பூருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகள் ஏற்றப்படும் இடத்தில் அரசு அதிகாரிகள் நெல்லின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஆட்கள் கொண்டு ரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டது.