மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு விஜய் கட்சியினர் மரியாதை

62பார்த்தது
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த தின விழா இன்று பல்வேறு அமைப்புகளால் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கேணிக்கரையில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பெரியாரின் கொள்கைகளை நினைவுபடுத்தும் வகையில் கைத்தடிகளை திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் ஞான வள்ளுவனிடம், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் வழங்கினார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி