ஆசிரியா்கள் மீது வழக்கு

67பார்த்தது
மயிலாடுதுறையில் வகுப்பாசிரியா் மற்றும் தலைமை ஆசிரியா் தாக்கியதாக பள்ளி மாணவா் வியாழக்கிழமை எலிமருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், ஆசிரியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சோழம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணிமாறன். இவரது மகன் மனோஜ் (16) மயிலாடுதுறையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வருகிறாா். இவா், அக்டோபா் மாதத்தில் இருந்து சரியாக பள்ளிக்கு வருவதில்லையாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவரை, தலைமை ஆசிரியா் மற்றும் வகுப்பு ஆசிரியா் ஆகியோா் கண்டித்ததுடன், அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பள்ளிக்கு எதிரில் உள்ள வணிக வளாகத்துக்குச் சென்ற மாணவா் மனோஜ், எலி பிஸ்கட் உட்கொண்டு, தற்கொலைக்கு முயற்சித்தாராம். தகவலறிந்த ஆசிரியா்கள், மனோஜை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.




இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த மாணவரின் பெற்றோா் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமையாசிரியா் மற்றும் வகுப்பாசிரியா் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி