நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகேயன் அதிரடி கைது

83பார்த்தது
நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகேயன் அதிரடி கைது
மத்திய சென்னை தொகுதியில் பல்லவன் இல்லத்தின் அருகே 165வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டு புகார் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி