“கடவுள் ரஜினிக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும்” - அனுபம் கெர்

81பார்த்தது
முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண விழா நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர், “ரஜினி சிறந்தவர்! மிகவும் தாழ்மையானவர். அவருக்கு கடவுள் நீண்ட ஆயுளை தரவேண்டும்” என தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ரஜினியுடன் எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.