லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்

64பார்த்தது
லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ''கட்டுமானப் பணிக்கு மணலுக்கு பதிலாக உபயோகிக்கும் எம். சாண்ட், பி. சாண்ட் விலையை குவாரி உரிமையாளர்கள் திடீரென உயர்த்தியதால், கட்டுமான பணிகள் பாதிக்கின்றன'' என பொறியாளர்கள், லாரி உரிமையாளர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கட்டுமான பணிக்கு பெரும்பாலும் தேனி, திண்டுக்கல் பகுதி குவாரிகளில் இருந்து எம். சாண்ட், பி. சாண்ட், ஜல்லிக்கற்கள் கொள்முதல் செய்கின்றனர். சில நாட்களாக எம். சாண்ட் ஒரு யூனிட் விலை ரூ. 3 ஆயிரம் என இருந்ததை ரூ. 4 ஆயிரமாக நிர்ணயம் செய்து உயர்த்தியுள்ளனர்.

இதே போல் பி சாண்ட் விலையை ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாகவும், முக்கால் இஞ்ச் ஜல்லிகற்கள் ரூ. 2 ஆயிரத்து 600 ல் இருந்து ரூ 3 ஆயிரமாகவும், ஒன்றரை இஞ்ச் ஜல்லிக்கற்கள் ரூ. 2 ஆயிரத்து 500ல் இருந்து ரூ. 3 ஆயிரமாகவும் விலை உயர்ந்துள்ளது.
யூனிட்டுக்கு தற்போது ரூ. 1000 வரை ஒரே நேரத்தில் அதிகரித்ததால் சிறிய அளவில் வீடு, கடை போன்ற கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இதனால் உசிலம்பட்டி அனைத்து லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், திடீர் விலை உயர்வைக் கண்டித்து நேற்று (அக். 1) தொடங்கிய வேலை நிறுத்த போராட்டம் (அக். 6) வரை தொடரும் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி