தல்லாகுளம் பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு

54பார்த்தது
தல்லாகுளம் பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 15. 04. 2024, திங்கட்கிழமை, உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் திருக்கோவிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் கலைவாணன், திருப்பரங்குன்றம்அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் / செயல் அலுவலர் சுரேஷ், மதுரை வடக்கு சரக ஆய்வர் கர்ணன், அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், பாலமுருகன், பிரதீபா, அருட் செல்வன், திருக்கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக 8, 95, 289 ரூபாய் ரொக்கமும், தங்கம் 16 கிராம், வெள்ளி 236 கிராம் ஆகியன கிடைக்கப்பெற்றன.

தொடர்புடைய செய்தி