மதுரா கல்லூரியில் இன்று தமிழ் துறை சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா உ. வே. சாமிநாத ஐயர் பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. விழாவில் மதுரை கல்லூரி வாரிய தலைவர் சங்கர சீதாராமன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேராசிரியர் கூறும் ஞானசம்பந்தன் தாயின் அருமை தாத்தாவின் பெருமையும் எனும் தலைப்பில் பல்வேறு கருத்துக்களை மாணவ மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மதுரை கல்லூரி நிர்வாகிகள் மற்றும் திரளான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.