மதுரையில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நகரில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
மதுரை நகரில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய கூடுதல் போலீசார் நகரின் முக்கிய சந்திபுக்கள், பாலங்கள், வழிப்பட்டு தலங்கள் மற்றும் பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் கூடுதலாக நியமிக்கபட்டுள்ளனர்.
மேலும் கூடுதலாக ரோந்து போலீசாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் காவல் அதிகாரிகள் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியை கண்காணிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றிரவு குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேக வாகனங்கள் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ய போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக உள்ளனர்.