மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள சி. எஸ். ஐ சர்ச்சில் நேற்று நடைபெற்ற பிராத்தனையின் போது இரு தரப்பினர் மோதல் ஏற்பட்டது.
சர்ச்சின் வரவு, செலவு விபரங்களை கேட்டதால் இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் மோதி கொண்ட விவகாரத்தில் ஆபிரகாம் என்பவர் கொடுத்த புகாரில் ஆல்வீன், துரைசிங்கம், பாபு ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விளக்குத்தூண் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சபை மக்கள் முன்னிலையில் இரு தரப்பு மோதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.