மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பதவி உயர்வு செய்யப்பட்டு கார்த்திகா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் 2 ஆண்டுகளாக முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பில் கார்த்திகா செயல்பட்டு வந்த நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புத்தகத் திருவிழாவில் மாணவிகள் சாமி வந்து ஆடிய சம்பவம், பள்ளி மாணவிகளை கொண்டு கழிவறையை சுத்தம் செய்த சம்பவம், புத்தக திருவிழாவில் மாணவர்களை வெயிலில் நிற்கவைத்த சம்பவம், அதோடு கடந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் மாணாக்கர்களின் வினாத்தாள் மாற்றப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து சம்பவம் என தொடர்ந்து மதுரையில் பல சர்ச்சைகளால் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா கள்ளக்குறிச்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.