மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு வைர கிரிடமும், தங்ககவசம் சாத்தியும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தியும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
அதிகாலையிலயே கங்கா ஸ்நானம் செய்துவிட்டு புத்தாடைகள் அணிந்து பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தனர். மதுரை மட்டுமின்றி வட மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில், ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவில், அழகர்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலுமே பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
மீனாட்சியம்மன் கோவிலில் தீபாவளி நாளில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனை சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தத நாங்கள் செய்த புண்ணியம் என பெங்களூரில் இருநது வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.