கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு துணை வட்டாட்சியர் கோகுல கிருஷ்ணன் உள்ளிட அதிகாரிகள் போடிச்சிப்பள்ளி பகுதியில் நேற்று (அக் 30) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கேட்பாராற்று நின்றிருந்த டிப்பர் லாரி அருகே சோதனை செய்தனர். அதில் இரண்டு யூனிட் கற்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவை போடிச்சிப்பள்ளியில் இருந்து கெலமங்கலத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.