யுபிஐ செயலிகளான போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்பட பிற செயலிகளில் இனி வரும் காலத்தில் பணப்பரிமாற்றத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. UPI செயலியை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் GST கட்டணம் என்பது வதந்தி என மத்திய அரசு கூறியுள்ளது.