நிலவுக்கு அருகே இரண்டு கோள்கள் வந்து நமது கண்களுக்கு விருந்து படைக்க உள்ளன. அதாவது, வெள்ளி மற்றும் சனி கோள்கள் வருகிற 25ம் தேதி அருகருகே சந்திக்க உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வெள்ளி மற்றும் சனி கோள்களுக்கு கிழே தேய்பிறை நிலாவும் வர உள்ளதால் பார்ப்பதற்கு ஸ்மைலி எமோஜி (நிலவு சிரிப்பதை போல) போல காட்சியளிக்க உள்ளது. இவையனைத்தும் பளிச்சென காட்சியளிக்கும் என்பதால் சாதாரண கண்களாலேயே பார்க்க முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.