ஊத்தங்கரை அடுத்த ஓலப்பட்டியில் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஊத்தங்கரை தாசில்தார் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வருவாய் வட்டத்திற்குட்பட்ட ஓலப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் புயலால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளின் சுவர்கள் இடியும் நிலையில் உள்ளன என வட்டாட்சியர் திருமாலிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். மனுவின் அடிப்படையில் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்.