கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் மருதேபள்ளி கிராமத்தில் இன்று கோமாரி நோய் தடுப்பூசி 6 வது சுற்று தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எம். சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் கால்நடை மரு. இளங்கோவன், துணை இயக்குனர் மரு. பிரசன்னா, உதவி இயக்குனர்கள் மரு. மகேந்திரன், மரு. அருள்ராஜ், மரு. சிவசங்கர், மரு. ரமேஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், துரைசாமி, வட்டாட்சியர் பொன்னாலா, கால்நடை மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.