
தேன்கனிக்கோட்டையில் கோவில் விழாவில் எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சவுந்தர்யவல்லி சமேத பேட்டராய சாமி கோயில் தேர்த்திருவிழாவை ஒட்டி அய்யூர் சாலையில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. ஓசூர் பிரகாஷ் விழாவை தொடங்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, அதன் சுற்றுவட்டார கிராமங்கள் மொத்தம் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அலங்கரிக்கப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதை இளைஞர்கள் அடக்கி அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த அலங்கார தட்டிகளை எடுத்தனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இளைஞர்கள் கலந்துகொண்டு கண்டு களித்தனர்.