மகளிர் தின விழாவை முன்னி ட்டு நேற்று விழிப்புணர்வு பேரணி

62பார்த்தது
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ். , சத்யசாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மகளிர் தின விழாவை முன்னி ட்டு நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், சாலையோரம் குப்பை கொட்டக்கூடாது. புதிதாக வைக்கப்படும் தொட்டியில் குப்பை கொட்டி 2 நாட்களுக்கு ஒரு முறை அப்புறப்படுத்த வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சத்யசாய் நகரில் நடப்படும் மரக்கன்றுகளை அவரவர்கள் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரித்து எதிர்கால சந்ததியினருக்கு மாசில்லா காற்றை விட்டுச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் விளக்கப்பட்டன.
பின்னர் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பர்கூர் தி. மு. க. , எம். எல். ஏ. , மதியழகன், துாய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் அரசு மகளிர் கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவியருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், பஞ். , தலைவர் காயத்திரிதேவி கோவிந்தராஜ், தி. மு. க. , மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் தனசேகரன் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
–––––––––

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி