கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் நேற்று போருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்ற நபரை பிடித்து சோதனை செய்த போது, அவர் 60 கிராம் கஞ்சா வைத்திருப்து தெரியவந்தது. இதையெடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் சூளகிரி வி. ஐ. பி. நகரை சேர்ந்த லோகநாதன் (23) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.