மரம் நடுவதை மாணவர்கள் கடமையாக கொள்ள வேண்டும் மேயர் பேச்சு

52பார்த்தது
கரூர் வெண்ணமலை கொங்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில் ஈசா யோகா மையம் மற்றும் கொங்கு கலை அறிவியல் கல்லூரி சார்பில் உலக சுற்றுச்சூழல் தின காவிரி கூக்குரல் திட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எவ்வாறு மேம்படுகிறது மாணவர்கள் இளம் தலைமுறை சேர்ந்தவர்கள் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை கடமையாக கொள்ள வேண்டும் என்று பேசினார் இந்நிகழ்ச்சியில் கொங்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலகுரு சுவாமி மற்றும் ஈஷா யோகா மைய நிர்வாகிகள் சிவசங்கர் முத்துசாமி கனரா வங்கி முதன்மை மேலாளர் ஆர். பி. ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி