கரூர் மாவட்ட முழுவதும் 173. 1 மில்லி மீட்டர் மழை பதிவு

58பார்த்தது
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மழை - கரூர் மாவட்ட முழுவதும் 173. 1 மில்லி மீட்டர் மழை பதிவு மாவட்ட நிர்வாகம் தகவல்.

*கரூரில் அதிகபட்சமாக அணைப்பாளையம் பகுதியில் 47. 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. *

கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் வாட்டி வதைத்து வரும் நிலையில் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்திற்கு மேல் பதிவாகி வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று கரூர் மாநகர் பகுதி, அரவக்குறிச்சி, அணைப்பாளையம், க. பரமத்தி, குளித்தலை, பாலவிடுதி உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் அனைபாளையம் பகுதியில் 47. 6 மில்லி மீட்டர் மழை மற்றும் கரூர் மாநகர் பகுதியில் 34. 2'மில்லி மீட்டர் மழை, அரவக்குறிச்சி பகுதியில் 33. 8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது கரூர் மாவட்டம் முழுவதும் 173. 1 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது மாவட்ட நிர்வாகம் தகவல்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி