குமரி: பொது மக்களுக்கு சிலம்ப விளையாட்டு விழிப்புணர்வு

70பார்த்தது
குமரி: பொது மக்களுக்கு சிலம்ப விளையாட்டு விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் AVD மேல்நிலைப்பள்ளியில் பொது மக்களுக்கு சிலம்ப விளையாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SISA BOOK உலக சாதனைக்கு முயற்சி செய்து வெற்றியும் அடைந்தனர். சிலம்பம் 65 நிமிடம் தொடர்ந்து நிற்காமல் சிலம்பம் சுற்றினர் மாணவர்களை காண வந்திருந்த பொதுமக்களுக்கும் பெற்றோர்களும் வியப்பில் இருந்தனர். இதனை தலைமை ஏற்று புதூர் N.ஸ்ரீராம் ஆசான் சிலம்பப் பள்ளியின் குரு ஸ்ரீ.ஜெயகண்ணன் M.A தலைமை ஏற்று நடத்தி வந்தார். நிகழ்ச்சிக்கு டாக்டர்.சிலம்பு சுரேஷ் முன்னிலை வகித்து தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார். 

மேலும் SISA World Record சார்பாக Dr.அருள் அந்தோணி கலந்து கொண்டார். சிலம்ப ஆசான் ரெஸ்லின், AVD மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் பன்னீர் செல்வம், இலந்தை அடிதட்டு ஊர் தலைவர் முத்துலிங்கம் மற்றும் ராஜீவ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கன்னியாகுமரி மாவட்டப் பள்ளிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு உற்சாகமூட்டினார் டாக்டர்.சிலம்பு சுரேஷ். புதூர் N.ஸ்ரீராம் ஆசான் சிலம்பப் பள்ளியின் குரு ஸ்ரீ.ஜெயகண்ணன் M.A அவர்களை பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி