மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு. வாண வேடிக்கை மற்றும் பக்தர்களின் கோஷத்துடன் நடை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் காண 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால் முன்கூட்டியே மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மண்டல பூஜை டிச.26ம் தேதியும், மகரவிளக்கு பூஜை ஜன.14ம் தேதியும் நடைபெறுகிறது.