குமரியில் பறக்கும் படை சோதனையில் ரூ. 64 லட்சம் சிக்கியது.

1111பார்த்தது
குமரியில் பறக்கும் படை சோதனையில் ரூ. 64 லட்சம் சிக்கியது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளும், நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடக்கிறது. சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் 2 இடங்களில் மொத்தம் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 975-ம், பத்மநாபுபரம் சட்டசபை தொகுதியில் ரூ. 56 ஆயிரமும், விளவங்கோடு சட்டசபை தொகுதியில் 2 இடங்களில் மொத்தம் ரூ. 3. 45 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி ஒரே நாளில் ரூ. 6 லட்சத்து 84 ஆயிரத்து 975 சிக்கியது. இதேபோல பத்மநாபபுரம் சட்டசபை தொகு தியில் ஒருகாரில் கொண்டு செல்லப்பட்டநாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவான நோட்டீஸ்களையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது வரை குமரி மாவட்டத்தில் ரூ. 1 கோடியே 25 லட்சத்து 15 ஆயிரத்து 402 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே போல ரூ. 1. 40 கோடி மதிப்பிலான நகைகளும் சிக்கியுள்ளன.

டேக்ஸ் :