பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 18½ லட்சம் வசூல்.

75பார்த்தது
பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ. 18½ லட்சம் வசூல்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் அனைத்தும் நேற்று திறந்து எண்ணப்பட்டது. குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்னவேல்பாண்டியன் தலைமையில், உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில், ஆய்வாளர் சரஸ்வதி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளரும், கோவில் மேலாளருமான ஆனந்த் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆதி பராசக்தி மன்றத்தினர்
மற்றும் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் வருமானமாக ரூ. 18 லட்சத்து 57 ஆயிரத்து 771-ம்,
தங்கம் 13. 540 கிராம், வெள்ளி 27. 130 கிராம் மற்றும் வெளி
நாட்டு பணமும் வசூலாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி