திருநங்கை மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய கனிமொழி

69பார்த்தது
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. இதில், சென்னை திருவல்லிக்கேணி, லேடி லிவிங்ஸ்டன் பள்ளியில் படித்த திருநங்கை நிவேதா, 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றார். தொடர்ந்து, மாணவி நிவேதாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று (மே 15) திருநங்கை நிவேதாவை நேரில் அழைத்து கனிமொழி எம்.பி பாராட்டியுள்ளார். தொடர்ந்து, மாணவியின் அடுத்தக் கட்ட படிப்பு குறித்து கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி