நரிக்குறவர் எல்லாமே உங்களுக்கு ஓட்டு போட்டோம்- எங்களை கண் எடுத்துப் பாருங்க என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்த நரிக்குறவர மக்கள்.!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் ஊசிமணி மற்றும் விளையாட்டு பொருட்கள், பச்சை குத்துதல் போன்ற தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் தட்கோ திட்டத்தின் மூலம் லோன் வேண்டி மூன்று வருடத்திற்கு முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்
அதனை பரிசீலனை செய்த ஆட்சியர் இவர்களுக்கு லோன் வழங்க பரிந்துரை செய்தார்.
அப்போது தட்கோ மேனேஜராக இருந்தவர் பணி மாறுதல் காரணமாக வேறு பகுதிக்கு சென்று விட்டதால் இவர்களுக்கு லோன் தர மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் கோரிக்கை மன அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
லோன் வேண்டுமென்றால் வங்கியில் ஜாதி சான்றிதழ் கேட்டார்கள் அதையும் வாங்கி விட்டோம், ஆதார் கார்டு, பான் கார்டு , வங்கி கணக்கு என அனைத்தும் எங்களிடம் இருந்தும் மானியத்தில் எங்களுக்கு லோன் கொடுக்க இதுவரை முன்வரவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.