காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் பூர நட்சத்திரத்தை ஒட்டி, காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் புறா உழவாரப் பணி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், காஞ்சிபுரத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர்.
விநாயகர், காமாட்சியம்மன், துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி, மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்தனர்.