அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்

80பார்த்தது
அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கல்
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பேட்டை மற்றும் இயக்குனாம்பேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் அய்யம்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் 67 மாணவர்களுக்கும், ஏகனாம் பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 180 மாணவர்களுக்கும் , ஏகனாம்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 242 சைக்கிள்களும் என மொத்தம் 489 சைக்கிள்களை எம்பி செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் , துணைத் தலைவர் சேகர் , ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :