செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், அம்பேத்கர் அவர்களையும் இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நீங்க வந்து பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் பேரூர் செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் செய்யூர் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.