சர்வதேச சிலை கடத்தலை தடுப்பது குறித்த பயிற்சி

58பார்த்தது
இந்திய தொல்லியல் துறை மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இணைந்து, தொல்பொருட்கள் பாதுகாப்பு குறித்தும், சிலை கடத்துதல் தடுப்பது குறித்தும், 5 நாள் பயிற்சி பட்டறை கடந்த 9 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் துவங்கி வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த தொல்லியல்துறை, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அருங்காட்சியக அலுவலர்கள், கஸ்டம்ஸ் அதிகாரிகள், பழம்பொருள் கண்டுபிடிப்பு நிபுணர்கள், காவல்துறையினர் மற்றும் துறைமுக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த குழுவை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 44 பேர் கொண்ட குழுவினர் இன்று(செப்.12) செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்பதற்கு வந்தனர். வரும் வழியில் வடநெம்மேலி பாம்பு பண்ணை, மாமல்லபுரம் புலிக்குகை, கடற்கரை, ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணை உருண்டைகல் பாறை, சிற்பக்கல்லூரி பகுதிகளை பார்வையிட்டு குழுவாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி