லியோ க்ளைமாக்ஸ் போல விஜய்க்கு போன் செய்த கமல்

51பார்த்தது
லியோ க்ளைமாக்ஸ் போல விஜய்க்கு போன் செய்த கமல்
நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அவர் கட்சி தொடங்கியதற்கு அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் வெளிநாடு சென்றுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் விஜய்க்கு ஃபோன் செய்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் ‘இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகளும்’ என தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இதே போல லியோ க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்க்கு ஃபோன் செய்து இன்னும் பேர களையெடுக்க வேண்டியிருக்கு என கூறியிருப்பார்.

தொடர்புடைய செய்தி