அமெரிக்காவின் அடுத்த அதிபர் ட்ரம்ப்?

59பார்த்தது
அமெரிக்காவின் அடுத்த அதிபர் ட்ரம்ப்?
அமேரிக்காவில் அதிபர் பைடனுக்கும், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கும் நடைபெற்ற விவாதத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என நடந்த வாக்கெடுப்பில் 67 சதவிகிதம் பேர் விவாதத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ளனர். 33 சதவிகிதம் பேர் பைடன் வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ளனர். விவாதத்திற்கு முன்பு டிரம்பிற்கு 55 சதவிகித ஆதரவும், பைடனுக்கு 45 சதவிகித ஆதரவும் இருந்தது. ஆனால், விவாதத்திற்கு பின் டிரம்பிற்கான ஆதரவு 67 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 57 சதவிகிதம்பேர் நாட்டை வழிநடத்தும் விவகாரத்தில் பைடன் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளனர்.
நாட்டை வழிநடத்துவதில் டிரம்ப் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக 36 சதவிகிதம்பேர் தெரிவித்துள்ளனர். ஆனால், 14 சதவிகிதம்பேர் மட்டுமே பைடன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.