இரும்பு பட்டாம்பூச்சி.. மாணவர் அசத்தல்!

3920பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில் சிவம் சிங் என்ற மாணவர் பழைய உலோகத்தால் தனித்துவமான பட்டாம்பூச்சியை உருவாக்கினார். இந்த இரும்பு பட்டாம்பூச்சியை 4 குவிண்டால் உலோகத்தால் செய்துள்ளார். இதனையடுத்து, இதை உருவாக்க 65,000 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த பட்டாம்பூச்சியை 20 நாட்களில் செய்துள்ளார். ஸ்கிராப் மெட்டலில் செய்துள்ள இந்த ராட்சத பட்டாம்பூச்சி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்படவில்லை என கூறியுள்ளார். மாணவர் சிவம் சிங்-ஐ பலரும் பாரட்டி வருகின்றனர்.