இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இனி ஐபோன் 16 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படாது என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 1.71 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்ய வேண்டிய நிலையில், வெறும் 1.48 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ காமர்ஸ் நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டிருந்த ஐபோன்கள் அனைத்தும், தற்போது விற்பனை தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.