ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடும் டிமாண்ட் இருந்தது. புவனேஷ்வர் – ரூ.10.75 கோடி, தீபக் சாஹர்-ரூ.9.25 கோடி, ஆகாஷ் தீப்-ரூ.8 கோடி, முகேஷ் குமார்-ரூ.8 கோடி, துஷார் தேஷ்பாண்டே-ரூ.6.50 கோடிக்கு வாங்கப்பட்டனர். வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை விட, இந்திய இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட் மைதானங்களில் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பதாலேயே டிமாண்ட் அதிகரித்துள்ளது.