SIP-ல் ஒருவர் மாதம் தோறும் ரூ.20,000-ஐ ஆண்டுக்கு 12% வட்டி விகிதத்தில் சேமிக்கிறார் எனில், அவர் செய்யும் முதலீடு 8 ஆண்டுகள் முடிவில் ரூ.32 லட்சம் ரூபாய் ஆகும். இந்தப் பணத்தை எடுக்காமல் SIP-ஐ தொடர்வாரேயானால் அடுத்த 4 ஆண்டுகளில் பணம் ரூ. 64 லட்சம் ஆகும். மேலும் 3 ஆண்டுகள் இந்த முதலீடு தொடருமானால் ரூ.1 கோடியைத் தொடலாம். அதாவது 15 ஆண்டுகளில் ரூ.36 லட்சம் ரூபாய் தான் முதலீடு செய்திருப்பார். ஆனால் வருவாய் ரூ.1 கோடியாக இருக்கும்.