கோர விபத்து - கல்லூரி மாணவர் பலி

83பார்த்தது
கோர விபத்து - கல்லூரி மாணவர் பலி
மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றபோது நிலைத்தடுமாறி நத்தம் மேல்பாலத்தில் மோதியதில் கௌதம் என்ற பொறியியல் மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரோடு பைக்கில் சென்ற நண்பர் பாலத்தில் தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை காயமின்றி மீட்டுள்ளனர். விபத்து குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி