ஆபாச படங்கள் அனுப்பிய உணவு டெலிவரி ஊழியர்

90989பார்த்தது
ஆபாச படங்கள் அனுப்பிய உணவு டெலிவரி ஊழியர்
மும்பையை சேர்ந்த ஜோதிராம் பாபுராவ் என்ற இளைஞர் பிரபல உணவு டெலிவரி செயலியில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் தான் டெலிவரி செய்யும் பெண்களின் போன் நம்பர்களை எடுத்து அவர்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வந்துள்ளார். மேலும் வீடியோ கால் செய்து நிர்வாணமாக அவர்களிடம் பேச முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அதில் ஒரு பெண் போலீசில் புகார் அளித்த நிலையில், அவர்கள் அந்த ஜோதிராமை கைது செய்தனர். இதில் அவர் 25 பெண்களுக்கு வீடியோ அனுப்பியது தெரியவந்துள்ளது.